Tuesday, 31 December 2013

மனதைத்திறந்து பேசு


என் மேல் உனக்கு
கோவம் இருந்தால் 
அதை என்னிடமே நீ 
காட்டி அதை தீர்த்து விடு 
மாறாக உன் மனதில் 
பூட்டி வைக்காதே ....
நான் தவறு இழைப்பவன் தான்..
தவறு என் மேல் நீ கண்டால் 
என்னிடம் சொல்லி 
என்னை திருத்தி விடு ...
மாறாக
மௌனமாக இருந்து
என்னை கொன்று விடாதே .....

நான் உன் எண்ணம் போல் நடந்திருப்பேன்
எனக்கு உன் மனதை படிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் ...

உன் மனதை படிக்கும் சக்தி எனக்கு இல்லாததால்

என்னை மன்னித்து விடு நண்பியே ...!!!


ஜெகன் லக்ஷ்மி 

காதல் வலி



நான் பலமுறை முகம் 
கழுவதை பார்த்து... 
என் நண்பர்கள் கேட்கிறார்கள் 
ஏன் என்று... 
அன்பே உன் பிரிவால் நான் 
அழுவதை... 
யாரும் கண்டுவிடக்கூடாது என்று... 
யாருக்கு தெரியும் என் 
கண்ணீரின் கோலம்... 
யாரும் அறியமாட்டார்கள் 
நீயும் அறியவில்லை

ஜெகன் லக்ஷ்மி 

கண்ணாடி காதல்

நான் சிரிக்கும் போது
என் சிரிப்பாகவும்
அழும் வேளையில்
என் கண்ணீராகவும்
கோபம் காட்டும் நேரத்தில்
என் கோபமாகவும்
என்னில் நீ
பிரதிபலிக்கிறாயடி...

ஜெகன் லக்ஷ்மி 

என் காதலின் தவிப்பு

சந்தனப்பேழை ஒன்றில் 
எவரொருவர் கண்டிடாமல் 
இறுக்கமாய் மூடிவைத்தேன் 
என் காதல் நினைவுகளை...

முட்டி மோதிப் பார்த்துவிட்டு 
காற்றோடு கைகோத்து 
கதவிடுக்கில் வெளியேறி...

காதலை சொல்லிவருகிறது 
கதைகதையாய்....
மூச்சுக்காற்றில் தெளித்துவிட்ட
சந்தனத்தின் வாசனையாய்...


ஜெகன் லக்ஷ்மி 

பதில் தருவாயா..?

இந்த நிமிடங்களும் அழுகிறேன்..! 
கடவுள் எங்கு இருகிறார்..?
வாழ்கை துவங்க யோசிக்கிறேன்..
ஆனால்
மனது என் கடந்த கால நினைவுகளாள் அழுகிறது..!
பதில் தருவாயா..? 
ஏன் என் வாழ்வில் அவள் வந்தால்...?

ஜெகன் லக்ஷ்மி 

ரசனை

எனது சிறுபிள்ளைத் 
தனமான பேச்சுக்களை 
ரசித்தார்கள் !
எனது மௌனமான 
நற்குணங்களைப் பழித்தார்கள் !
என்ன உலகமிது என 
யோசித்துக் கொண்டிருக்கையில் 
அங்கே பிறந்தது 
எனக்கான தனி உலகம்..
ஆளரவமற்ற தனிமை
எங்கெங்கும் நிம்மதியின் நிழல் !
உயிரைப் பழிக்கும்
எந்த முரணுமில்லை
என்னைச் சுற்றி இப்போது !
மலையருவி முத்தமிட்டுக்
குளிர்விக்கும்
மஞ்சள் பூக்களின் புன்னகை
எவ்வளவு அழகோ
அவ்வளவு அழகாய்
அமைதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !


ஜெகன் லக்ஷ்மி 
சோகங்கள் கண்ணீரில்
மட்டும் மறைந்திருக்காது
வாய் விட்டு சிரிக்கும்
பலரின் பொய் சிரிப்புகளியும்
மறைந்திருக்கும்...!!

உங்கள் அன்புடன் 
ஜெகன் லக்ஷ்மி 
பாசம் வைத்த எல்லோரும்
பாதியில் விட்டு போவதைபோல்..
நேசம் வைத்த நீ
நெஞ்சோடு முள்ளாக
தைத்தது ஏன்??
பாசம் வைத்த உனக்கு
என் நேசத்தின் சுவாசம்
புரியவில்லையா...!!

உங்கள் அன்புடன் 
ஜெகன் லக்ஷ்மி