Friday, 3 January 2014

காதலின் உணர்வுகள்








































காதலின் பயணம்

எனக்கான இன்றைய பேருந்து பயணத்தில் காதலாய் ஒரு கவிதையை தந்துவிட்டு செல்கிறாள் அவள்..
எனக்கு முன் ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி... எனக்குப் பின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்குகின்றாள்...
அவள் ஏறிய இடமும் இறங்கிய இடமும் தெரியாது இந்த பயணத்தில்...
ஜன்னலுக்கு வெளியே ரசித்துக்கொண்டு வந்த அவளை ரசித்துக்கொண்டிருந்தேன் நான்...!
ஒரு காதல் காவியத்தில் தொலைந்துப்போன பக்கங்கள் போல இறங்கிப்போகிறாள் அவள்...
ஐகூக் கவிதையில் மூன்றாம் வரியை தவறவிட்ட வாசகன்போல் தவிக்கிறேன் நான்...
சஞ்சலப்பட்ட மனதோடு தற்போதைக்கு இறங்கும் இடத்தை மறந்துவிட்டு பயணிக்கிறேன் நான்...!

Thursday, 2 January 2014








ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது, இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை..

அழகான கவிதைகள்